இந்நிலையில் போலீஸ் காரர் பரமசிவம் ஆபாசமாக பேசிக் கொண்டு வந்ததால், கண்டக்டர் ராஜேந்திரன், "அநாகரிகமாக பேசுகிறீர்களே... நீங்கள் போலீஸ் தானா... சந்தேகமாக உள் ளது. அடையாள அட்டையை காட் டுங்கள்' என்றார். ஆத்திரமடைந்த போலீஸ்காரர் பரமசிவம், செருப்பை கழற்றி கண்டக் டரை தாக்கினார். அதனால் அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட் டது. பஸ் பெண் ணையாற்று பாலத் தில் வந்தபோது போலீஸ்காரர், பஸ் டிரைவர் மீது செருப்பை வீசினார். மேலும், "கீர்' ராடை பிடித்து இழுத்து நீயூட்ரல் செய்து தகராறு செய்தார். ஆத்திரமடைந்த பயணிகள் போலீஸ்காருக்கு தர்ம அடி கொடுத்தனர். போலீஸ்காரர் செயல் எல்லை மீறிச் சென்றதைத் தொடர்ந்து டிரைவர் குணசேகரன் பஸ்சை பகல் 2.40 மணிக்கு சாலையின் குறுக்கே நிறுத்தினார். உடனே போலீஸ்காரர் பரமசிவம் பஸ்சிலிருந்து இறங்கி, அருகில் இருந்த செக்போஸ்ட் பணியில் இருந்த போலீஸ்காரர்களிடம் சென்று கண்டக்டர் மற்றும் பயணிகள் தன்னை தாக்குவதாக கூறினார். இதற்கிடையே பஸ் சாலையில் குறுக்கே நிறுத்தப்பட் டதால் கடலூர்-புதுச்சேரி சாலை யில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கண்டக்டர் மற்றும் டிரைவரை போலீஸ்காரர் செருப்பால் அடித்த தகவலறிந்த அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆல்பேட்டை செக் போஸ்ட் அருகே திரண்டதால் பதட்டம் நிலவியது. நிலமை மோசமாவதை அறிந்த போலீசார், பரமசிவத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் உதயசூரியன், கிளை மேலாளர் குணசேகரன், இன்ஸ்பெக்டர்கள் சுந்தரவடிவேல், ராமதாஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்து போக்குவரத்து தொழிலாளர்களை சமாதானம் செய்து, சாலையின் குறுக்கே நிறுத்திய பஸ்சை மாலை 3.20 மணிக்கு எடுத்தனர். அதனைத் தொடர்ந்து 4.30 மணிக்கு போக்குவரத்து சீரடைந்தது. போலீஸ்காரர் செருப்பால் அடித்த சம்பவம் தொடர்பாக டிரைவர் குணசேகரன் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.டிராபிக் ஜாமில் அமைச்சர் சிக்கினார் போலீசை கண்டித்து ஆல்பேட்டை செக்போஸ்ட் அருகே பஸ்சை சாலையின் குறுக்கே நிறுத்தியதால் 40 நிமிடம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்நிலையில் 3.30 மணிக்கு காட்டுமன்னார்கோவிலில் இருந்து சென்னை சென்ற அமைச்சர் பன்னீர்செல்வத்தின் கார் மஞ்சக்குப்பத்தில் "டிராபிக் ஜாமில்' சிக்கியது. உடன் போலீசார், அமைச்சரின் காருக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர். ஆல்பேட்டை செக்போஸ்ட் அருகே வந்ததும், அமைச்சர் பன்னீர்செல்வம் காரை நிறுத்தி அங்கிருந்த அதிகாரிகளிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரித்து சென்றார்.
Source: dinamalar
No comments:
Post a Comment