Islamic Widget

September 28, 2010

பிச்சாவரம் படகு சவாரிக்கு "மைக்' அறிவிப்பு துவக்கம்

பஸ் மற்றும் ரயில் நிலையம் போல் சுற்றுலாப் பயணிகள் தகவலுக்காக பிச்சாவரத்தில் படகு சவாரிக்கு "மைக்' அறிவிப்பு துவங்கியது. சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் நகர புராதன மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் சுற்றுலாத் துறை சார்பில் 50 லட்சம் ரூபாய் ஒதுக்கி பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடக்கிறது. சுற்றுலா மையத்திற்கு வரும் பயணிகளை கவரும் வகையில் தொலை நோக்கு கோபுரம், சுற்றிலும் மதில் சுவர், மின் விளக்குகள் உள் ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செய்யப் பட் டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது பயணிகள்

காத்திருக்கும் அறையில் பாடல்கள் மற்றும் செய்திகள் என காலை 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை ஒலி பரப்பப்படுகிறது. விடுமுறை, பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த "டோக்கன்' முறையும், படகு சவாரிக்கு முன் பதிவு செய்து காத்திருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு பஸ், ரயில் நிலையங்களில் அறிவிக்கும் அறிவிப்பு போல் பயணிக்க உள்ள படகு குறித்து அறிவிக்கப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


Source: dinamalar

No comments:

Post a Comment