Islamic Widget

September 28, 2010

வருகிற 30-ந்தேதி மாலை 3.30 மணிக்கு தீர்ப்பு

அயோத்தி பாபர் மசூதி இடம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கு அலகாபாத் ஐகோர்ட்டில் 60 ஆண்டு களாக நடந்து வருகிறது. கடைசியாக இதை விசாரித்து வந்த அலகாபாத் ஐகோர்ட்டு 24-ந்தேதி இதன் மீது தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தது.


இந்த தீர்ப்பு வெளிவந்தால் நாட்டில் பெரிய அளவில் கலவரம் நடக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் பதட்டம் நிலவியது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்த நிலையில் ரமேஷ் சந்திரா திரிபாதி என்பவர் வழக்கு தீர்ப்பை தள்ளி வைக்க வேண்டும், கோர்ட்டுக்கு வெளியே பேச்சு வார்த்தை மூலம் இதற்கு தீர்வு காணவேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். தலைமைநீதிபதி கபாடியா தலைமையிலான 3 பேர் பெஞ்சு முன்பு இது விசாரணைக்கு வந்தது. அவர்கள் அயோத்தி வழக்கு தீர்ப்பை ஒரு வாரம் தள்ளி வைக்க வேண்டும் என கடந்த 23-ந்தேதி உத்தரவிட்டனர். அதன்படி தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.

தீர்ப்பை தள்ளி வைக்கும் வழக்கை இன்று மீண்டும் விசாரிப்பதாக அறிவித்து இருந்தனர். அதன்படி இன்று நீதிபதிகள் விசாரணையை தொடங்கினார்கள். மனுதாரர் தரப்பில் வக்கீல் முகுல் ரோகாத்கீ ஆஜராகி வாதாடினார். அரசு தரப்பில் அட்டர்னி ஜெனரல் வானா வதி வாதாடினார். மதியம் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தனர்.

அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பை தள்ளி வைக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவிட்டது. இதையடுத்து அயோத்தி வழக்கில் வருகிற 30-ந்தேதி மாலை 3.30 மணிக்கு தீர்ப்பு வழக்கப்படும் என்று அலகாபாத் ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment