Islamic Widget

September 28, 2010

அயோத்தி வழக்கு: 30ல் தீர்ப்பு

அலகாபாத்: அயோத்தி வழக்கில் 30ந் தேதி தீர்ப்பு கூறுகிறது அலகாபாத் நீதிமன்றம். அயோத்தி தீர்ப்பிற்கு தடை கோரும் மனுவை தடை செய்தது உச்சநீதிமன்றம். அயோத்தி வழக்கில் 24ந் தேதி தீர்ப்பு கூறவிருந்தது அலகாபாத் நீதிமன்றம். திரிபாதியின் பொதுநல மனுவை ஏற்று விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது-.




அயோத்தி பிரச்னை:
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.5 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பதே வழக்கு. 60 ஆண்டாக நிலுவையில் உள்ள வழக்கின் தீர்ப்பை அறிய நாடு முழுவதும் ஆர்வம் காணப்படுகிறது. ராமர் பிறந்த இடம் என்பதால் தங்களுக்கு சொந்தம் என்று ஒரு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். பாபர் மசூதி இருந்ததால் தங்களுக்கு சொந்தம் என்று மற்றொரு பிரிவினர் வலியுறுத்தியுள்ளனர். சர்ச்சைக்குரிய நிலம் குறித்து நடைபெற்ற பல கட்ட பேச்சுத் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கருத்து:
அயோத்தி வழக்கிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் வரவேற்பளித்துள்ளது. இதனையடுத்து அலகாபாத் உயர்நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பிற்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தடை நீக்கப்பட்டதற்கு பாரதீய ஜனதா கட்சியும் ஆதரவு அளித்துள்ளது.

No comments:

Post a Comment