சவுதி அரேபியாவின் தேசிய தினத்தை (23-09-2010) முன்னிட்டு சட்டத்திற்கு புறம்பாக நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி வெளியேற அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இக்காலக்கட்டத்தில் உம்ரா விசா, ஹஜ் விசா, சுற்றுலா விசா ஆகியவற்றில் சவுதி அரேபியா வருகை தந்து விசா காலாவதியான பிறகும் சவுதியில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் சரணடைந்து நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக வருகிற செப்.25 முதல் 2011 ஆம் ஆண்டு மார் 23 வரையிலான 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது பொதுமன்னிப்புக் காலக்கட்டத்தில் போதிய ஆவணங்கள் இல்லாமல் சவுதியில் சிக்கியவர்கள் அபராதம் கட்டாமல் நாட்டை விட்டு வெளியேறலாம். லட்சக்கணக்கான வெளிநாட்டவர்கள் சவுதி அரேபியாவில் சட்டத்திற்கு புறம்பாக வசித்து வருகின்றனர்
சவுதி அரேபியா கடவுச்சீட்டு துறை அதிகாரிகள், தங்களை கைது செய்ய வேண்டுமென்பதற்காக ஜித்தா கந்தரா பாலத்தின் அடியில் காத்திருக்கும் மக்களை படத்தில் காணலாம்.
தகவல் & படம்: INTJ, ARAB NEWS
No comments:
Post a Comment