Islamic Widget

September 13, 2010

பரங்கிப்பேட்டை வெள்ளாற்று பாலம் நாளை திறப்பு: 2 அமைச்சர்கள் பங்கேற்பு

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பேரூராட்சித் தலைவர் முஹமது யூனுஸ் மற்றும் கிள்ளை பேரூராட்சித் தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலையில் மக்களின் கனவுப் பாலமான பரங்கிப்பேட்டை-கிள்ளையை இணைக்கும் வெள்ளாற்றுப் பாலம் நாளை திறக்கப்படவுள்ளது.




வெள்ளாற்றுப் பாலம் திறப்பு விழாவில் இரண்டு அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.கிள்ளையில் இருந்து பரங்கிப் பேட்டையை இணைக்கும் வகையில் வெள்ளாற்றின் குறுக்கே 20 கோடி ரூபாய் மதிப்பில் நெடுஞ்சாலை துறைசார்பில் புதிய பாலம் கட்டப்பட்டது.





இதற்கான திறப்பு விழா பரங்கிப்பேட்டையில் நாளை நடக்கிறது. நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன் தலைமை தாங்குகிறார். கலெக்டர் சீத்தாராமன் வரவேற்கிறார். புதிய பாலத்தை சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைக்கிறார்.விழாவில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் சந்தானம், சென்னை நபார்டு மற்றும் கிராம சாலைகள் தலைமைப் பொறியாளர் சண்முகநாதன், சேர்மன்கள் செந்தில்குமார், முத்துபெருமாள், மாமல்லன், பங்கேற்கிறார்கள்.

No comments:

Post a Comment