Islamic Widget

September 30, 2010

சர்ச்ச்சைக்குரிய இடத்தை 3 பிரிவாக பிரிக்க வேண்டும் : அலகாபாத் கோர்ட் தீர்ப்பு



அலகாபாத் : அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தை 3 ஆக பிரிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளதாக வக்கீல்கள் கூறினர். அயோத்தி யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக, கடந்த 60 ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கின் இறுதித் தீர்ப்பை, அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் நீதிபதிகள் எஸ்.யு.கான் தலைமையில் நீதிபதிகள் சுதிர் அகர்வால், டி.வி.சர்மா ஆகியோர் இன்று மாலை 4 மணி அளவில் படிக்க ஆரம்பித்தனர் .

தீர்ப்பை அடுத்து பா.ஜ., உயர்மட்டக்குழு அவசர கூட்டம் இன்று மாலை பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி இல்லத்தில் நடக்கிறது. தீர்ப்பை அடுத்து எழுந்துள்ள நிலை குளித்து சன்னி முஸ்லிம் சட்டவாரியமும் அவசரமாக கூடி விவாதிக்கிறது. ஆர்,எஸ்,எஸ், தலைவர் பகவத்சிங் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகிறார். தீர்ப்பு 600 பக்கங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. நீதிபதிகள் எஸ்.யு.கான் தலைமையில் நீதிபதிகள் சுதிர் அகர்வால், டி.வி.சர்மா நீதிபதிகள் தீர்ப்பை தனித்தனியாக அறிவித்துள்ளளனர். ராம்லாலா, வக்பு போர்டு , மற்றும் நிர்மோகி அகாரா சார்பில் ஆஜரான வக்கீல்கள் தங்களுக்கு கிடைத்த சாதகமான தீர்ப்பை நிருபர்களிடம் தெரிவித்தபடி இருந்தனர்.



சர்ச்சைக்குரிய அயோத்தி நிலத்தை ராம்லாலா, சன்னி வக்பு போர்டு , மற்றும் நிர்மோகி அகாரா ஆகியோருக்கு 3 பிரிவாக பிரித்து கொடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளதாக வக்கீல்கள் நிருபர்களிடம் கூறினர். தற்போதைய நிலையே ‌தொடரும் என வக்கீல் ரவிசங்கர்பிரசாத் கூறினார்.
தீவிர பாதுகாப்பு : தீர்ப்பை ஒட்டி அலகாபாத் ஐகோர்ட் வளாகத்தில் உச்சகட்ட உஷார் நிலை அமல் படுத்தப்பட்டிருந்தது. கோர்ட்டுக்குள் வழக்கில் சம்பந்தப்பட்ட இருதரப்பினரை தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவர்களும் ஒரு முறை கோர்ட்டுக்குள் சென்று விட்டால், தீர்ப்பு முழுமையாக வாசிக்கப்பட்ட பிறகு தான் வெளியே வர வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. பத்திரிகையாளர்களுக்கு தீர்ப்பின் பிரதிகள் லக்னோ மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த கூடத்தில் வழங்கப்பட்டது.

முன்னதாக நிருபர்களிடம் பேசிய லக்னோ கலெக்டர் சுனில் அகர்வால், 3 நீதிபதிகளும் தனித்தனியாக தீர்ப்பு வழங்கியிருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் பத்திரிகையாளர்கள் தீர்ப்பு குறித்த தகவல்களை வெளியிடும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என லக்னோ கலெக்டர் மற்றும் போலீஸ் டி.ஐ.ஜி., வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

அமைச்சரவை கூட்டம் : இதற்கிடையில் டில்லியில் இன்று மாலை 5 மணிக்கு பாதுகாப்பு தெ?டர்பான மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. அயோத்தி தீர்பபை அடுத்து ஏற்படக்கூடிய நிலைமையை சமாளிப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment