Islamic Widget

September 08, 2010

பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசு, டீசல் விலை 9 காசு உயர்வு - நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசும், டீசல் விலை லிட்டருக்கு 9 காசும் உயர்ந்தது.




சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்துக்கு ஏற்ப, அவ்வப்போது பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த நிலையில் பெட்ரோல் பம்ப் டீலர்களுக்கு வழங்கப்படும் கமிஷன் தொகையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்தது.



இதைத்தொடர்ந்து பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை மத்திய அரசு நேற்று சிறிது உயர்த்தியது.



அதன்படி, நாடு முழுவதும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 முதல் 12 காசு வரையும், டீசல் விலை லிட்டருக்கு 9 முதல் 10 காசு வரையும் உயர்த்தப்பட்டது.



சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசு உயர்ந்தது. இதைத்தொடர்ந்து, சென்னையில் 55 ரூபாய் 92 காசாக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 56 ரூபாய் 2 காசாக உயர்ந்தது. இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 9 காசு உயர்ந்தது. இதனால், 40 ரூபாய் 7 காசாக இருந்த ஒரு லிட்டர் டீசலின் விலை, 40 ரூபாய் 16 காசாக அதிகரித்தது.



டெல்லியில் பெட்ரோல் விலை 11 காசு உயர்ந்து லிட்டருக்கு 51 ரூபாய் 56 காசு ஆனது. இதேபோல் டீசல் விலை 9 காசு உயர்ந்து லிட்டருக்கு 37 ரூபாய் 71 காசு ஆனது.



இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

Source: Daily Thanthi

No comments:

Post a Comment