Islamic Widget

August 26, 2010

தீவிரவாதிகள் விமானத்தை கடத்தினால் பயணிகளை மீட்பது எப்படி?


கடல்வழியாக புகுந்து மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவத்துக்கு பின்னர் தீவிரவாத தடுப்பு கமாண்டோ படை வலுப்படுத்தப்பட்டது. இது போன்ற அவசர காலங்களில் அதிரடியாக செயல்படுவது குறித்து இவர்களுக்கு கூடுதல் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.




கடல் வழியாக தீவிரவாதிகள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டால் அதனை தடுத்து நிறுத்துவது எப்படி? என்பது பற்றிய ஒத்திகை தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. உள்ளூர் போலீசாருடன் கமாண்டோ படையினர் இணைந்து நடத்திய இந்த ஒத்திகை வெற்றிகரமாக முடிந்துள்ளது.



தீவிரவாதிகள் விமானங்களை கடத்தினால் அதில் இருந்து பயணிகளை பத்திரமாக மீட்பது குறித்த ஒத்திகை சென்னை மீனம் பாக்கம் விமான நிலையத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 24-ந்தேதி தொடங்கிய இந்த பாதுகாப்பு ஒத்திகையில் 160 கமாண்டோ படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். நாளை (27-ந்தேதி) வரை இந்த ஒத்திகை நடத்தப்படுகிறது.



சென்னையில் கடந்த ஆண்டு கமாண்டோ படை வீரர்களுக்கு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. அசோக் நகர் போலீஸ் பயிற்சி கல்லூரியில் இவர்கள் பயிற்சி பெற்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கிருந்து இட மாற்றம் செய்யப்பட்ட இவர்கள் வண்டலூர் அருகே ஊன மாஞ்சேரியில் உள்ள போலீஸ் பயிற்சி அகாடமியில் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக கமாண்டோ படையினர் உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, எந்தவிதமான தீவிரவாத தாக்குதலையும் துணிச்சலுடன் எதிர் கொள்ள கமாண்டோ படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்று தெரி வித்தார்.

No comments:

Post a Comment