Islamic Widget

August 26, 2010

தொடர் மழையால் வீராணம் ஏரி நீர் மட்டம் 43 அடியாக உயர்வு

கடலூர் மாவட்டத்தின் பிரதான ஏரியான வீராணம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்தது.




இன்று காலையில் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 43.70 கன அடியாக உயர்ந்தது. வடவாறு மூலம் ஏரிக்கு வினாடிக்கு 450 கன அடி நீர்வரத்து இருந்தது. ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி. நீர்மட்டம் உயர்வால் வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக நேற்று முதல் வினாடிக்கு 76 கன அடி தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.

பாசன சாகுபடிக்கு கைகொடுக்கும் விதத்தில் வீராணம் ஏரியில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. எனவே ஏரியில் இருந்து விரைவில் தண்ணீர் திறந்து விடப்படும் என்ற நம்பிக்கையுடன் அந்த பகுதி விவசாயிகள் உள்ளனர்.

No comments:

Post a Comment