Islamic Widget

August 27, 2010

ஆசிரியரின் பாலியல் தொந்தரவு பள்ளி மாணவிகள் குமுறல்

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update


சென்னை : பள்ளியில் ஆசிரியர் பாலியல் தொந்தரவு செய்வதாகவும், புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மாணவிகள் தெரிவித்தனர்...

திருவள்ளுவர் மாவட்டம் கசுவா கிராமத்தில் ஒரு பள்ளி உள்ளது. தனியார் டிரஸ்ட் கீழ் இந்த பள்ளி இயங்குகிறது. மாணவர்களுக்கு விடுதியுடன் இலவச கல்வி அளிக்கப்படுகிறது. பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு நடப்பதாகவும், மாணவர்களை கொடுமைப்படுத்துவதாகவும் புகார்கள் வந்தன. தற்போது அந்த பள்ளி மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் 4 ஆண்டுகள் ஆகியும் எந்த நடவடிக்கையும் இல்லை.

பாதிக்கப்பட்ட மாணவி நிருபர்களிடம் கூறியதாவது: 8ம் வகுப்பு வரை வேறொரு பள்ளியில் படித்து வந்தேன். 2007ம் ஆண்டு 9ம் வகுப்பில் இந்த பள்ளியில் சேர்ந்தேன். ஒரு நாள் இயற்பியல் ஆசிரியர், அறைகளை சுத்தம் செய்ய சொன்னார். துடைப்பம் எடுக்க லேப்புக்கு சென்றபோது என் பின்னால் வந்து கட்டிப்பிடித்தார். அதிர்ச்சியடைந்த நான் தோழி ரம்யாவிடம் (பெயர் மாற்றம்) கூறினேன். அவளுடன் சேர்ந்து துடைப்பம் எடுக்க லேப்புக்கு மீண்டும் சென்றேன். என்னிடம் பாலியல் தொந்தரவு செய்தார். என் தோழியும் இதை பார்த்து அதிர்ந்தார். இனி படிக்க முடியாத அளவுக்கு செய்து விடுவேன் என எங்களை மிரட்டினார்.

இதுபற்றி பெண் நூலகரிடம் கூறினேன். அவருடைய கணவர் வழக்கறிஞர் என்பதால் அவரிடம் தெரிவித்தேன். அவரும் இது தொடர்பாக வழக்கு தொடர்வோம் என தெரிவித்தார். விஷயம் பள்ளி நிர்வாகத்துக்கு தெரிந்து விட்டது. எந்த சம்பவமும் நடக்கவில்லை என எழுதி கொடுக்க வற்புறுத்தி 2 மணி நேரம் தனியறையில் வைத்து மிரட்டினர். நான் எழுதி கொடுத்து விட்டேன்.

இதுபோன்ற சம்பவம் இனியும் மற்ற மாணவிகளுக்கு நடக்கக் கூடாது என்று தைரியமாக என் தாயார் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் கொடுத்தேன். அதற்கு முன்பு திருவள்ளூவர் மாவட்ட கலெக்டரிடம் மனுக் கொடுத்தேன். இந்திய குழந்தைகள் நல ஆணையத்திலும் மனு கொடுத்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
இவ்வாறு மாணவி கூறினார்.  பேட்டியின்போது, வக்கீல் ஸ்ரீதர் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment