Islamic Widget

August 27, 2010

குடிபோதையில் இருந்தால் பைக், கார் ஸ்டார்ட் ஆகாது

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news updateகுடிபோதையில் கார், பைக் ஓட்டுவதை தடுக்க, புதிய கருவியை கோவை இன்ஜினியர் தயாரித்துள்ளார். வண்டியில் இதை பொருத்தி விட்டால், போதையில் இருப்பவர்கள் வண்டியை ஸ்டார்ட் செய்தால், ஸ்டார்ட் ஆகாது.

கோவை கல்வீரம்பாளையம் நால்வர் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார்(27). பி.இ எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படித்தவர். 2004ம் ஆண்டில், இவர் ‘ஆட்டோமேட்டிக் ரூம் கன்ட்ரோலர்‘ என்ற கருவியை உருவாக்கினார்.

இதற்கு போபாலிலுள்ள தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியர் என்ற அமைப்பு தங்கப்பதக்கம் வழங்கியது. வீட்டு பூட்டை உடைத்து திருடர்கள் உள்ளே வந்தால், இந்த கருவி சத்தமிடுவதுடன் அனைத்து விளக்குகளையும் எரிய வைக்கும். இதனால், திருட்டை தவிர்க்கலாம். இதேபோல் பல கருவிகளை இவர் கண்டுபிடித்துள்ளார்.
தற்போது, ‘டிரங்கன் டிரைவ் கன்ட்ரோல் சிஸ்டம்‘ என்ற புதிய கருவியை கண்டுபிடித்துள்ளார். இக்கருவியை பைக், கார் உள்ளிட்ட மோட்டார் வாகனங்களில்  பொருத்தலாம். கருவி சீல் வைக்கப்பட்டிருக்கும்.

 டிரைவர் சீட்டில் அமர்ந்தவுடன், கருவியிலுள்ள ஆல்கஹால் சென்சார் தானாக செயல்படும். டிரைவர் குடித்திருந்தால் ‘மன்னிச்சிடுங்க பாஸ்... நீங்க மது குடிச்சிருக்கீங்க... உங்களால வண்டி ஓட்ட முடியாது‘ என்று எச்சரிக்கை வரும். மது குடிக்காவிட்டால், டிஸ்பிளேவில் 3 இலக்க எண் தோன்றி மறையும். அந்த எண்ணை நம்பர் பட்டனில் அழுத்த வேண்டும். அத்துடன் ஓட்டுபவரிடம் உள்ள ரகசிய எண்ணை சேர்த்து அழுத்தினால் வண்டி ஸ்டார்ட் ஆகிவிடும். வண்டியை ஸ்டார்ட் செய்த பிறகு மது குடித்தாலும், 30 வினாடியில் கண்டுபிடித்து வண்டி நின்று விடும். ‘மத்திய, மாநில அரசுகள், வாகன உற்பத்தியாளர்கள் உதவினால், இந்தக் கருவியை எல்லா வாகனங்களிலும் பொருத்தி, விபத்துகளை தடுக்கலாம்‘ என்கிறார் முத்துக்குமார்.

No comments:

Post a Comment