Islamic Widget

August 19, 2010

மத்திய ரிசர்வ் படை பிரிவிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் : மத்திய ரிசர்வ் படை பிரிவிற்கு தமிழ்நாட்டிலிருந்து 581 இடங்களுக்கான தேர்விற்கு விண்ணப்பங் கள் வரவேற்கப்படுகிறது.இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, புதுச் சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய பகுதிகளிலிருந்து தகுதி வாய்ந்த விண்ணப்பதாரரிடமிருந்து மத்திய ரிசர்வு போலீஸ் படை பிரிவிற்கு இருபாலருக்கும் சேர்த்து 581 பேர் தேர்வு செய்யப் படவுள்ளனர்.இதற்கு மெட்ரிக்குலேஷன் அல் லது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 1.8.2010 அன்று 18 - 23 வயதிற்குள் இருக்க வேண்டும். பழங் குடியினருக்கு 5 வயது தளர்த்தியும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பிற்கு 3 வயது தளர்த்தி சலுகை வழங் கப் பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 25ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். தகுதி பெறும் நபருக்கு பதிவுத் தபால் மூலம் தெரிவிக்கப்படும். தேர்வு நடக்கும் தேதி, இடமும் பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். தேர்வு செய்யப்படுவோர் மருத்துவத் தேர்விற்கு உட் படுத்தப்படுவார்கள். இவ்வாறு செய்திக்கு றிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment