பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் ஊராட்சி பிரதிநிதிகளுக்கு ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது.ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட் டம் சார்பில் ஊராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், கவுன்சிலர்கள் மற் றும் வார்டு உறுப்பினர்களுக்கு ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது. சேர்மன் முத்துபெருமாள் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர்கள் சந்திரகாசன், சந்தர் முன் னிலை வகித்தனர். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜமுனாமேரி வரவேற்றார்.
குழந்தைகள் வளர்ச்சி மற்றும் செயல் பாடுகள் குறித்தும், கிராமங்களில் தொற்று நோய் பரவாமல் தூய்மையாக வைத்துக் கொள்வது குறித்து ஊராட்சி பிரதிநிகளுக்கு மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அன்பழகி விளக்கினார்.நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ், துணைத் தலைவர் செழியன், ஊராட்சி தலைவர்கள் கஸ்தூரி ஜெய் சங்கர், சக்கரபாணி பங்கேற்றனர்.பரங்கிப்பேட்டை ஐக்கிய ஜமா அத் சார்பில் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஊட்டச்சத்து மையங்களில் படிக்கும் 50 மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் மற்றும் சமையல் பாத்திரங்கள் வாங்க 2,000 ரூபாயை ஐக்கிய ஜமா அத் தலைவர் முகமது யூனுஸ் வழங்கினார்.
No comments:
Post a Comment