ஹிந்து கோயில் பாதுகாப்பு கமிட்டியின் தலைவர் தாம் கமலானந்தா. இம்மாதம் எட்டாம் தேதி ஹைதராபாத்தில் நடந்த பேரணியில் கமலானந்தா வெறுப்பை உமிழும் உரையை நிகழ்த்தியுள்ளார்.
எம்.ஐ.எம் தலைவர் அக்பருத்தீன் உவைஸி உணர்ச்சியைத் தூண்டும் உரையை நிகழ்த்தினார் என்று குற்றம் சாட்டி அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிகழ்ச்சிகளை ஹிந்துத்துவா சக்திகள் ஏற்பாடு செய்திருந்தன. இந்த பேரணியில் உரை நிகழ்த்திய கமலானந்தா முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை உமிழும் விஷக்கருத்துக்களை வெளியிட்டார்.
No comments:
Post a Comment