கோவையைச் சார்ந்தவர் சத்யநாராயணன். வயது 24. பீளமேடு லட்சுமி நகரைச் சார்ந்த கோடீசுவரர்களான ஜெயகுமார் - உமா தம்பதியரின் மகன் ஆவார். ஜெயகுமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மரணமாகி விட, உமாவும் ஆறு மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.
மிகப் பெரிய வீட்டில் தனியாக வசித்து வந்த சத்யநாராயணன் வாழ்க்கையில் நிம்மதியின்றி இருந்துள்ளார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த அவர் சில நாட்களாக வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார். நெருங்கிய நண்பர்களிடம் வாழ்க்கையை வாழப் பிடிக்கவில்லை என துயரத்துடன் சொல்லியுள்ளார்.
இந்நிலையில் நேற்று அவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று வீட்டிற்கு வந்த சத்யநாராயணின் தாத்தா, அவருடைய உடலைப் பார்த்து அதிர்ச்சியுற்று காவல்துறைக்கு தகவல் தந்துள்ளார். வீட்டைச் சோதனையிட்ட காவல்துறைக்கு சத்யநாராயணன் எழுதிய கடிதம் கிடைத்தள்ளது.
அந்தக் கடிதத்தில் , ” பாசமாக வளர்த்த தாய் தந்தையர் தனியாக விட்டுச் சென்றதால் வாழப் பிடிக்கவில்லை” என்றும் அதனால் இந்த முடிவினை எடுத்திருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், ”சொத்துக்கள் முழுவதையும் அரசிடம் கொடுத்து அனாதை இல்லத்திற்கு வழங்கும்படி” தெரிவித்துள்ளார்.
சத்யநாராயணனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment