சவூதி அரேபியாவின் தென்பகுதியில் ஜீஸான் என்னும் நகரம் உள்ளது. இந்நகரில் பிளே ஸ்டேசன் வாங்கித்தர மறுத்த தன் தந்தையை நான்கே வயதான சிறுவன் ஆத்திரத்தில் சுட்டுக் கொன்றுள்ளான். இச்சம்பவம் அந்நகரில் பெரும் அதிர்ச்சியைத் தோற்றுவித்துள்ளது.தன் தந்தையுடனும், குடும்ப உறுப்பினர்களுடனும் வழக்கமான அங்காடி உலா நேற்று சென்றிருக்கையில், நான்கே வயதான அந்தச் சிறுவன் தந்தையிடம் ப்ளே ஸ்டேசன் வாங்கித் தரும்படி கேட்டிருக்கிறான். சிறு வயது என்பதால் அதற்கு மறுப்பு தெரிவித்த தந்தை வேறு ஏதேனும் வாங்கிக் கொள்ளும்படி கூறியிருக்கிறார். இருந்தும் ப்ளே ஸ்டேசன் தான் வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்த சிறுவன், வீட்டுக்கு வந்த பின்னர், உடை மாற்றச் சென்ற தந்தை துப்பாக்கியை வைப்பதைப் பார்த்துவிட்டு, அதைப் பாய்ந்து எடுத்து மிக அருகில் இருந்தபடி தந்தையை நோக்கிச் சுட்டிருக்கிறான். குண்டு பாய்ந்ததால் அந்தத் தந்தை உடனடியாக இறப்பைத் தழுவினார். காவல்துறை விசாரணை நடந்து வருகிறது. இச்செய்தியை அரபக நாளேடுகள் தெரிவித்துள்ளன.
April 26, 2012
4 வயது சிறுவன் சுட்டு தந்தை சாவு - சவூதியில் பரபரப்பு

Labels:
சவுதி அரேபியா செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- ரியாத்தில் பரங்கிப்பேட்டை (PIA)யின் கூட்டம் நடைபெற்றது
- சம்ஜோத எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் RSS தீவிரவாதியிடமிருந்து புதிய தகவல் ...!
- சிதம்பரத்தில் லஞ்சம் பெற்ற VAO கைது
- இறப்புச் செய்தி
- பாரத ஸ்டேட் வங்கியில் கிளார்க் வேலை வாய்ப்பு
- தமிழக அரசு அதிகாரிகளின் சம்பள உயர்வுக்குத் தடை!
- உங்கள் மொபைலின் ரகசியம் (IMEI – *#06#)
- யார் இந்த உதயகுமார் ?
- புதிய அமைச்சரவைப் பட்டியல் வெளியீடு!
No comments:
Post a Comment