கடலூர் சந்திப்பு ரயில் பயணிகள் நல சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், கடலூர் துறைமுக ரயில் நிலைய சந்திப்பில் அனைத்து ரயில்களும் நிற்க வலியுறுத்தி எம்.பி., முதல் அதிகாரிகள் வரை மனு கொடுத்தும், பல போராட்டங்கள் நடத்தியும் ரயில்களை நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனை கண்டித்தும், துறைமுக சந்திப்பில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி வரும் 17ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்துவது. இந்த போராட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகள், வர்த்தக, பொதுநல மற்றும் மாணவர் அமைப்புகளின் ஆதரவு கோருவது.இந்த போராட்டத்திற்கு பிறகும் ரயில்களை நிறுத்தாவிட்டால், துறைமுக ரயில் நிலையத்தை பூட்டு போட்டு பூட்டும் போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
No comments:
Post a Comment