உறவினர் வீட்டிற்குச் சென்ற இலங்கை பெண் மாயமானது குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அமானுல்லா மகன் சாதிக் பாஷா. இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன் இலங்கை சென்று வேலை செய்தபோது, அங்கு பைசா (எ) நிர்மலா பிரேமராணி, 30 என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் சிதம்பரத்தில் வசித்து வந்தனர். ஒரு வயதில் குழந்தை உள்ளது. சாதிக் பாஷா தற்போது துபாயில் வேலை செய்து வருகிறார். நேற்று காலை கடலூரில் உள்ள கணவரின் சகோதரி வீட்டிற்குச் சென்ற நிர்மலா பிரேமராணியை சிதம்பரம் பஸ் நிலையத்தில் மாமனார் அமானுல்லா பஸ் ஏற்றினார்.
ஆனால் நிர்மலா பிரேமராணி கடலூர் செல்லவில்லை. இதனையடுத்து நிர்மலா பிரேமராணி சென்ற பஸ் கண்டக்டரிடம் அமானுல்லா விசாரித்தபோது அவர் வழியில் பு.முட்லூர் ஜவுளிக்கடை பஸ் நிறுத்தத்தில் இறங்கியதாக தெரிவித்தார். மேலும் அவர் அங்கிருந்து எங்கு சென்றார் என்பது குறித்து தெரியவில்லை. இது குறித்து அமானுல்லா கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, காணாமல்போன நிர்மலா பிரேமராணியை தேடி வருகின்றனர்.
Source: dinamalar
No comments:
Post a Comment