Islamic Widget

October 08, 2011

தன்னுடைய நிலைப்பாடடை மாற்றிக்கொள்ளுமா டி.என்.டி.ஜே..!..?



வரும் 10.10.11 திங்கள் அன்று முத்துப்பேட்டை ரஹ்மத் பள்ளியினை மு
ற்றுகை இட போவதாக டி.என்.டி.ஜே அறிவித்து, அதற்காக ஏற்பாடுகளில்
முப்புரமாக இறங்கி நோட்டீஸ் வரை அடித்த முத்துப்பேட்டை எங்கும் ஓட்டி
உள்ளனர். இவற்றினை காணும் நம் மக்கள் ரஹ்மத் பள்ளியானது மிகப்பெரிய
தவறினை செய்துவிட்டதாகவும், டி.என்.டி.ஜே அதற்காக தான் போராட்டம்
நடத்துகிறார்கள் என்ற எண்ணத்தினை உருவாக்கி விட்டது.
ரஹ்மத் பள்ளியானது ஒவ்வொரு வருடமும் பள்ளி ஆண்டு விழா மலரினை வெளியிடுவது
வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் அதாவது 2010 பள்ளி ஆண்டு மலரானது
வெளிவந்தது.
இந்த ஆண்டு மலரில் அங்கு கல்வி பயிலும் மாணவிகளின்
படைப்புகள் வெளிவரும். அதனை மே மாத முதல் வாரத்தில் எல்லா மாணவிகளுக்கு
பள்ளி நிர்வாகம் விநியோகம் செய்து உள்ளது.
கதை, கட்டுரை, கவிதை, சித்திரங்கள, வரலாற்று சம்பங்கள் ஆகியவைகள் அடங்கிய
புத்தகமாக இது இருக்கும். அந்த கட்டுரைகளில் ஒன்று தான் ”நபிகளாரை
தெரிந்துக்கொள்ளுங்கள்” என்ற கட்டுரையானது அந்த புத்தகத்தில் 176
பக்கத்தில் பிரசுரமாகி இருந்தது. அதன் இடது ஓரப்பகுதியில் சிறிதாக
தக்பீர் கட்டிய நிலையில் ஒரு சித்திரமும் அச்சிடப்பட்டு இருக்கிறது. (கவன குறைவால் அச்சிடப்பட்டு இருக்கிறது)
அது மட்டுமல்லாமால் ரஹ்மத் அறகட்டளையானது பற்பல இஸ்லாமிய நன்னூல்களை
வெளியிட்டும் உள்ளது. அதனை படித்து மார்க்க ஞானம் பெற்ற பல அறிஞர்களை
பலரினை நாம் காணலாம். மற்றும் மாற்று மத சகோதரிளும், சகோதரர்களும்
இவர்களின் இஸ்லாமிய நூல்களை படித்து பயன் பெற்று வருகிறார்கள் என்பது
உண்மை தான். இஸ்லாமிய நூல்களை வெளியிடும் ரஹ்மத் அறக்கட்டளை இத்தகைய
தவறினை தெரிந்து செய்ய வாய்ப்புண்டா.. கொஞ்சம் யோசிக்கவும்.
தற்போது சித்திரம் வரையப்பட்ட பக்கங்களை கிழித்து விடுமாறும், அந்தஅவர்கள்
செய்தி வந்த பக்கங்களை மைக்கொண்டு அழிக்குமாறும் பள்ளி நிர்வாகமானது
அனைத்து பெற்றோர்களிடம் கூறி வருகிறது. அதற்குரிய தகுந்த
நடவடிக்கையினையும் பள்ளி நிர்வாகம் எடுத்து வருகிறது.
புத்தகம் வெளியாகி 5 மாதங்கள் கழித்து இவர்கள் செய்ய போகும் இந்த
போரட்டாமானது நியாயமானது தானா.. என்று நடுநிலை பேணுபவர்கள் மற்றும்
முத்துப்பேட்டை நல வளர்ச்சிக்காக ஒழைக்கும் மக்களிடம் விசாரித்தால்
தேவையில்லை என்று தான் சொல்வார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
ரஹ்மத் பள்ளியானது தெரியாமல் செய்த தவறினை மன்னிக்காமல் அதனை
பெரிதுப்படுத்தும் நோக்கில் செயல்படும் சகோதரர்களே.. அந்த பள்ளியில்
தாங்களின் சகோதரிகள் படித்துக்கொண்டு இருப்பார்கள் அல்லது அந்த பள்ளியில்
படித்து வெளி வந்த நல்லொழுக்கமுள்ள பெண்மணியாக அவர்கள் இருப்பார்கள்
என்பதினை தாங்கள் அறிந்தும் இருப்பீர்கள். இந்த பள்ளியானது இஸ்லாமிய
சகோதரிகளுக்கு மட்டுமில்லை மாற்று மத சகோதரிகளுக்கும் தான் என்பதினை
நினைத்து பாருங்கள். இத்தகைய போராட்டானது அங்கு பயிலும் மாணவிகளின்
மற்றும் ஆசிரியர் ஆசிரியைகளின்
மனநிலையினை பாதிக்க வாய்ப்புண்டு என்பதினை தாங்கள் ஏன்.. மறந்து விட்டீர்கள்..
இந்த பள்ளியில் படித்து பல சாதனைகளை புரிந்த மாணவிகளையும். சாதனை
படைத்துக்கொண்டு இருக்கும் மாணவிகளையும் நாம் கண்கூடாக பார்த்துகொண்டு
இருக்கின்றோம். பிற ஊர்களில் மட்டுமில்லை வெளி மாநிலங்களில் நடைபெறும்
கண்காட்சி போன்ற நிகழ்வுகளில் இப்பள்ளியின் மாணவிகள் பல சாதனை புரிந்து
பல விருதுகளை பெற்று வந்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் நிலைமைகளை
கொஞ்சம் நினைத்து பாருங்கள் சகோதரர்களே..
ரஹ்மத் பள்ளியானது நம் ஊரில் மட்டுமல்ல வெளியூர்களிலும், வெளிநாட்டிலும்
நன்மதிப்பினை பெற்ற கல்விக்கூடம் என்ற பெயரினை பெற்று வருகிறது.
ஒழுக்கம், கட்டுப்பாடு, பாதுகாப்பு மிகுந்த பள்ளிக்கூடமாகவும் இது
உள்ளது.
பள்ளி நிர்வாகம் செய்த தவறினை மன்னித்துக்கொள்ளுமாறு ஜனாப். முஸ்தபா
அவர்கள் இரண்டு மாதங்களுக்கு முன் கடிதம் ஒன்றினை டி.என்.டி.ஜே சகோதரர்களுக்கு அனுப்பி வைத்து
உள்ளார். இருப்பினும் தாங்கள் போரட்டம் செய்வோம் என்ற கொள்கையில் அந்த
சகோதாரர்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள்.
கடந்த சில மாதங்களாக இப்பள்ளியில்(+12) படித்து முடித்து சென்ற மாணவிகளையும் அவர்கள் தொடர்பு கொண்டு அந்த பிரதிகளையும் வாங்கி அச்சிடப்பட்ட அந்த பகுதியை நீக்கிவிடவே முயற்சியில் ஈடுபட்டும் இருக்கிறார்கள்

1 comment: