Islamic Widget

October 07, 2011

பரங்கிப்பேட்டை பேரூராட்சித் தலைவர் பதவியை பிடிக்க மும்முனை போட்டி

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை பேரூராட்சித் தலைவர் பதவியை பிடிக்க தி.மு.க., அ.தி.மு.க., மற்றும் சுயேச்சை வேட்பாளரிடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.பரங்கிப்பேட்டை பேரூராட்சித் தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., மாரிமுத்து, தி.மு.க., முகமது யூனுஸ், தே.மு.தி.க., ஷேக் முஜிபூர் ரஹ்மான், சுயேச்சையாக ஜெகந்நாதன், ஜெய்சங்கர், முகமது சபியுல்லா ஆகிய 6 பேர் போட்டியிடுகின்றனர். தி.மு.க., வேட்பாளரும் தற்போதைய தலைவருமான முகமது யூனுஸ் முஸ்லிம்கள் ஓட்டுகள் மற்றும் தி.மு.க., ஆட்சியில் செய்த சாதனைகளை கூறி மீண்டும் தலைவர் பதவியை தக்க வைத்துக்கொள்ள கடுமையாக போராடி வருகிறார்...
அ.தி.மு.க., வேட்பாளர் மாரிமுத்துவுக்கு ஆதரவாக சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் களம் இறங்கியுள்ளார். அ.தி.மு.க., அரசின் நலத்திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்வேன் என ஓட்டு சேகரித்து வருகிறார். சுயேச்சை வேட்பாளர் ஜெகந்தானுக்கு, பரங்கிப்பேட்டை பகுதியில் சொந்த செல்வாக்கு உள்ளதால் அதை பயன்படுத்தி வெற்றிப் பெற்றுவிடலாம் என 18 வார்டுகளிலும் கடுமையாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல் தே.மு.தி.க., வேட்பாளர் ஷேக் முஜிபுர் ரஹ்மான், ஜெய்சங்கர், முகமது சபியுல்லா ஆகியோர் ஆமை வேகத்தில் தேர்தல் பணியாற்றி வருகின் றனர். இதனால் தற்போது தலைவர் பதவியை பிடிக்க அ.தி.மு.க., தி.மு.க., மற்றும் சுயேச்சை வேட்பாளரிடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment