Islamic Widget

September 24, 2011

அமலுக்கு வந்தது தேர்தல் விதிமுறைகள்!

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 17, 19 ஆகிய தேதிகளில் நடக்கும் என தேர்தல் கமிஷன் அறிவித்ததையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே அனைத்து மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், எதிர்கட்சி தலைவர்கள் உட்பட அனைவரும் அரசு கார்களை திரும்ப ஒப்படைத்தனர்.

2 கட்டமாக நடைபெறும் இந்த தேர்தலில். சென்னை மாநகராட்சிக்கு அக்டோபர் 17​ந்தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமுலுக்கு வந்துவிட்டன. சென்னை மாநகராட்சியில் மேயர், துணை மேயர், ஆளுங்கட்சி தலைவர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோருக்கு அரசு கார்கள் வழங்கப்பட்டு இருந்தன. இந்த கார்களைதான் அவர்கள் அலுவலகப்பணிக்கு பயன்படுத்தி வந்தனர். தேர்தல் நடத்தை விதி அமுலுக்கு வந்துவிட்டதால் மேயர் மா. சுப்பிரமணியன், துணை மேயர் சத்யபாமா, ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி ஆகியோர் தாங்கள் பயன்படுத்தி வந்த அரசு கார்களை மாநகராட்சியிடம் ஒப்படைத்து விட்டனர்.

இதேபோல் 155 கவுன்சிலர்களுக்கு தங்களது வார்டுகளில் அலுவலகம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அவர்களும் தங்கள் அலுவலகங்களை காலி செய்து உள்ளனர்.

தமிழகமெங்கும் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் அரசு வாகனங்கள் அனைத்தம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருகின்றன என்று தெரிகிறது.

No comments:

Post a Comment