சென்னையிலிருந்து இன்று காலை ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று டெல்லிக்குப் புறப்பட்டது. அந்த விமானத்தில் 132 பயணிகள் இருந்தனர். ரன்வேயில் விமானம் சென்று கொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்படவே விமானம் ரன்வேயிலேயே நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானம் இறங்க அனுமதி கொடுக்கப்பட்டது. அந்த விமானம், ஜெட் ஏர்வேஸ் விமானம் நின்றிருந்த ரன்வேயில் தரையிறங்க எத்தனித்தது. அப்போது ரன்வேயில் ஒரு விமானம் நின்று கொண்டிருப்பதைப் பார்த்த ஏர் இந்தியா விமானி அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அவர் விமானத்தை தரையிறக்காமல் அப்படியே மேலே ஏற்றி விட்டார். ஏர் இந்தியா விமானம் மட்டும் தரையிறங்கியிருந்தால் மிகப் பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும். விமானியின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்க்கபட்டது. இரு விமானங்களிலும் சேர்த்து மொத்தம் 316 பயணிகள் மற்றும் ஊழியர்கள் இருந்தனர். என்பது குறிப்பிடதக்கது

These were from the carelessness of airport's security system and authorities as well. They should all be punished for this incident without any political or personal intervention. WILL THEY?????
ReplyDelete