Islamic Widget

November 20, 2011

சென்னையில் இருந்து புறப்பட்ட விமானத்தில் அதிகாரிகளை தாக்கிய இளம்பெண்



சென்னை விமான நிலையத்தில் இருந்து நள்ளிரவு 1.45 மணிக்கு ஜெர்மனி செல்லும் லுப் தான்சா விமானம் புறப்பட தயாராக நின்றது. அதில் 286 பயணிகள் இருந்தனர்.   அப்போது ஜெர்மனியை சேர்ந்த எலிசபெத்மெர்சா என்ற இளம் பெண் சீட் பெல்ட் போட மறுத்து ரகளையில் ஈடுபட்டார்.
அருகில் அமர்ந்திருந்த பயணிகளையும் தாக்கினார். உடனே விமான பணிப் பெண்கள் அவரை பிடித்தனர். அவர்களையும் அந்த பெண் தாக்கினார்.   இது பற்றி விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் அங்கு வந்து அந்த பெண்ணை சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் அதிகாரிகளையும் அவர் தாக்கினார். பின்னர் ஒருவழியாக அந்த பெண்ணை இருக்கையில் அமர வைத்து சீட் பெல்ட்டை போட வைத்தனர். ஆனால் அந்த பெண்ணை கீழே இறக்கினால் தான் விமானத்தை எடுப்பேன் என்று விமானி கூறினார்.

இதையடுத்து அங்கு டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பரிசோதித்த போது அந்த பெண் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல தெரிந்தது. அவரை விமானத்தில் இருந்து கீழே இறக்கி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். 45 நிமிடம் தாமதமாக அதிகாலை 2.30 மணிக்கு விமானம் புறப்பட்டது.

எலிசபெத் மெர்சா கடந்த 13-ந் தேதி இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளார். பின்னர் திரும்பிச் செல்லும் போது அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுபற்றி ஜெர்மன் நாட்டு துணை தூதரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment