கடலூர்: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றிய கூட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வனிதா தலைமையில் கடலூரில் நடைப்பெற்றது.
விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம் கடலூரில் நடந்தது கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வனிதா தலைமை தாங்கினார். ஆய்வாளர்கள் சரவண தேவேந்திரன், ஷியாம்சுந்தர், சதீஷ் முன்னிலை வகித்தனர். துணை ஆய்வாளர்கள், அனைத்து விநாயகர் சிலை நிர்வாகிகள், இந்து முன்னணி பிரமுகர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வனிதா கூட்டத்தில் சிலைகளின் உயரம் 5 அடிக்கும் குறைவாக இருக்க வேண்டும். சிலைகளை நிறுவியவர்களே 24 மணி நேரமும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். சிலை ஊர்வலம் 3 மற்றும் 5ம் தேதிகளில் நடக்கிறது. காலை 9 முதல் மாலை 6 மணி வரை ஊர்வலம் நடக்க வேண்டும். சிலைகளை கரைக்கும்போது பக்தர்கள் கடலில் வெகுதூரம் செல்லக்கூடாது. ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே ஊர்வலம் செல்ல வேண்டும். ஊர்வலத்தின்போது ஒலி பெருக்கி, வான வெடி போன்றவைகளுக்கு அனுமதி இல்லை என்பது போன்ற பல அறிவுரைகள் வழங்கினார்.
No comments:
Post a Comment