கோவை சந்தையில் மல்லிகைப்பூ கிலோ ரூ. 1600க்கு விற்கப்படுகிறது. சில்லரை விலையில் ஒரு முழம் மல்லிகைப் பூ ரூ. 50க்கு விற்கப்பட்டது. கோவை சந்தையில் அதிகபட்ச மொத்த விலையாக ரூ. 1600 க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ. 1000க்கும் மல்லிகைப்பூ ஏலம் போனது.
மல்லிகையைத் தொடர்ந்து பட்டுப்பூ, முல்லைப்பூ, ஜாதி மல்லி,செண்டு மல்லி, சம்பங்கி, அரளிப் பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கிலோ ரூ. 700 - ரூ.800 வரை விற்கப்பட்ட மல்லிகைப் பூ, நேற்று முதல் அதிகபட்சம் கிலோ ரூ. 1600க்கு ஏலம் போனது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு மல்லிகை விலை ரூ. 300க்கு விற்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.
பனிப் பொழிவு அதிகமாக இருப்பால் பூக்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது என்று மல்லிகை வியாபாரிகள் கூறுகின்றனர்.
Source:.inneram
No comments:
Post a Comment