ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள். அல்குர்ஆன் 2:196
(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலகமக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.
அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்)பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்திபெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும்.ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப்போவதில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாகஇருக்கின்றான். அல்குர்ஆன் 3:96-97
ஹஜ் கட்டாயக் கடமையாக இருப்பதுடன் அதை நிறை வேற்றுவதற்கு ஏராளமான நன்மைகளும் கிடைக்கின்றன. இது பற்றி பல ஹதீஸ்களை நாம் காண முடிகின்றது.
அமல்களில் சிறந்தது எது என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் “அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்புவது” என்று விடையளித்தார்கள். “அதற்கு அடுத்தபடியாக எது?” என்று கேட்கப்பட்டது. “அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வது” என்றார்கள். “அதற்கு அடுத்தபடியாக எது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்
“ஒரு உம்ராச் செய்துவிட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கத்தை தவிர வேறு கூலி இல்லை.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா.
pno.news
ismail
ksa
November 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- கடலூரில், இன்று: அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து: நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்
- இறப்புச் செய்தி
- கிரிக்கெட் வீரர்கள் தேர்வு 23ம் தேதி துவக்கம்
- அண்ணாமலைப் பல்கலை. எம்.ஏ., எம்.எஸ்சி. வகுப்புகள் நாளை தொடக்கம்
- விஜய் ஆதரவு அதிமுகவுக்கு
- அரசு மருத்துவமனையில் இரவு பணியில்டாக்டர்கள் நியமிக்க மக்கள் வலியுறுத்தல்
- சிதம்பரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் கலெக்டர் சீத்தாராமன் தகவல்
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) வெளியிட்ட புனித ரமழான் (ஹிஜ்ரீ 1431) கால அட்டவணை / Holy Ramadhan Calendar Hijri 1431 for Kuwait
- பிறை கருத்தரங்கம்
No comments:
Post a Comment