Islamic Widget

October 16, 2010

சிப்காட் வளாகத்தில் "கியூசக்ஸ்' கம்பெனியில் மின் இணைப்பு "கட்'

கடலூர் : கடலூர் சிப்காட்டில் உள்ள "கியூசக்ஸ்' சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று முதல் மின் இணைப்பு துண்டிக்கப் பட்டுள்ளது. கடலூர் அடுத்த சிப் காட் வளாகத்தை கடந்த 2004ம் ஆண்டு குளோபல் கம்யூனிட்டி மானிட்டரிங் அமைப்பு, நுகர்வோர் அமைப்புகள் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது. அதில் கம்பெனிகளில் வெளியேற்றப்படும் கழிவு நீர் மற்றும் வாயுக் களால் காற்று மற்றும் நீர் மாசுபடுவதாக கூறப்பட்டிருந்தது.

இது குறித்து பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதனை அடிப்படையாக கொண்டு அப்போதைய ஐகோர்ட் தலைமை நீதிபதி வழக்கு தொடர்ந் தார். 6 ஆண்டாக விசாரணை நடந்த இவ்வழக் கின் தீர்ப்பு கடந்த 8ம் தேதி கூறப்பட்டது. அதில் சிப் காட் வளாகத் தில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற் றப்படும் கழிவு நீரை சுத்திகரிப்பதற்காக உருவாக்கப் பட்ட "கியூசக்ஸ்' நிறுவனம் அரசிடம் உரிய அனுமதி பெறாமலேயே இயங்கி வருவதோடு, முறையாக ஒவ்வொரு கம் பெனியில் இருந்தும் வெளியேற்றப்படும் கழிவு நீரை ஆய்வு செய்யாததால், "கியூசக்ஸ்' நிறுவனத்தை மூட உத்தரவிடப்பட்டது.


கியூசக்ஸ் கம்பெனியில் நேற்று மின் வாரிய ஊழியர்கள் மின்இணைப்பை துண்டித்தனர்.



Source:  Dinamalar

No comments:

Post a Comment