Islamic Widget

October 17, 2010

செங்கல் விலையை கட்டுப்படுத்த கோரிக்கை

செங்கல் விலையை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு காங்., கோரிக்கை வைத்துள்ளது. காட்டுமன்னார்கோவிலில் காங்., வட்டார செயற் குழுக் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சச்சிதானந்தம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் நசீர் அகமது முன்னிலை வகித்தார். வட்டார தலைவர் இளங்கீரன் வரவேற் றார். கூட்டத்தில் நகர செயலர் செல்வம், சிறுபான்மை பிரிவு ஜாபர் அலி, இளைஞர் காங்., சுலைமான் சேட்டு, இளைஞர் காங்., நகர தலைவர் கார்த்திக், தங்கராசு மற்றும் பலர் பங்கேற்றனர்.



கூட்டத்தில், மத்திய அரசு செயல்படுத்திய திட்டங்களை விளக்கி கிராமங்கள், பேரூராட்சி பகுதிகளில் பொதுக் கூட்டங்கள் நடத்துவது. சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார் கோவில், ஜெயங்கொண் டம், அரியலூர் வழியாக திருச்சி வரை ரயில் பாதை மற்றும் காட்டுமன்னார் கோவிலில் மகளிர் கல் லூரி அமைக்க அரசை வலியுறுத்துவது. கலைஞர் வீடு வழங்கும் திட்டத் தால் ஏற்பட்டுள்ள கட்டுமான பொருட்கள் விலை ஏற்றத்தை மாவட்ட நிர்வாகம் கட்டுப்படுத்த வேண் டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment