உலகின் அதிவேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் சென்னை உள்ளிட்ட இந்தியாவின் மூன்று நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இதர நகரங்களில் பெரும்பாலானவை ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவையே என்பது குறிப்பிடத்தக்குத.
இந்திய நகரங்களில் சென்னை முதலிடம் பெறுகிறது. இதைத் தவிர பெங்களூர் மற்றும் அகமதாபாத்தும் இந்த பட்டியலில் உள்ளன.
முதலீட்டுக்கு நல்ல வாய்ப்பு, வேலைவாய்ப்பு, மக்கள் வசிக்கத் தேவையான அடிப்படை வதிகளை குறைவின்றி செய்து தருதல் போன்றவற்றின் அடிப்படையிலேயே இந்த நகரங்களைத் தேர்வு செய்துள்ளது போர்ப்ஸ் பத்திரிகை.
இந்திய நகரங்கள் தவிர, சீனாவின் செங்டு, சாங்கிங், சுஸோ, சிலியின் சான்டியாகோ, வடக்கு கரோலினாவின் ராலே தர்ஹாம், இஸ்ரேலின் டெல் அவிவ், மலேசியாவின் கோலாலம்பூர், வியட்நாமின் ஹனோய், ஐக்கிய அரபு குடியரசுகளின் அபுதாபி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் உள்ளிட்ட நகரங்களும் இநதப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
அதேநேரம் நியூயார்க், லண்டன், டோக்கியோ, பாரிஸ், சியோல், பெய்ஜிங், டெல்லி, மும்பை போன்ற நகரங்கள் இந்த கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இவை வளர்ந்த நகரங்களாக கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன.
Source: thatstamil
No comments:
Post a Comment