தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில் செவ்வாய்க்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை இப்போது ஒரிசா கடற்கரையோரப் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இந்த நிலையில் வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் ஏற்பட்டுள்ள மேகக்கூட்டங்களின் சுழற்சி காரணமாக தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் தென்மேற்கில் இருந்து மேற்கு நோக்கி மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த கடல்காற்று வீசக் கூடும்.
தமிழகத்தில் தஞ்சாவூர், சிவகங்கை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. மாநிலத்திலேயே மிக அதிக அளவாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் 120 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக நீலகிரி மாவட்டம் தேவலாவில் 110 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதர முக்கிய இடங்களில் திங்கள்கிழமை காலை 8.30 மணி வரை பதிவாகியுள்ள மழையளவு விவரம்
(மில்லி மீட்டரில்):
திருத்தணி 80, நீடாமங்கலம், கொடைக்கானல், புதுக்கோட்டை, திருமயம், ஆர்.எஸ். மங்கலம் 70, காரைக்கால், பாபநாசம் 60,
திருவிடைமருதூர், சங்ககிரி, கூடலூர் பஜார், பெரம்பலூர், தேவகோட்டை, திருப்பத்தூர் 50, பள்ளிப்பட்டு, காட்டுமன்னார் கோவில், அதிராமபட்டினம், கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருவையாறு, ராசிபுரம், ஏற்காடு, சின்னக்கல்லார், வால்பாறை, மருங்காபுரி, பெரியார் அணை, சிவகங்கை 40, ராமகிருஷ்ணராஜுபேட்டை, பூண்டி, திருவள்ளூர், ஒரத்தநாடு, தஞ்சாவூர், அறந்தாங்கி, அரிமளம், தொண்டி, குழித்துறை, வாழப்பாடி, நடுவட்டம். செட்டிகுளம், மேலூர் 30, தாமரைப்பாக்கம், கள்ளக்குறிச்சி, பேராவூரணி, திருத்துறைப்பூண்டி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கந்தர்வக்கோட்டை, பெருங்கலூர், கரம்பக்குடி, பாம்பன், ராமேசுவரம், அரக்கோணம், மங்களாபுரம், சேந்தமங்கலம், ஆத்தூர், ஓமலூர், ஜெயங்கொண்டம், வேம்பாவூர், சமயபுரம், சிட்டம்பட்டி, மதுரை, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் 20.
சென்னையில்...: நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும். பகலில் வெப்பநிலை 91 டிகிரி ஃபாரன்ஹீட் அளவாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Source:Dinamani
No comments:
Post a Comment