புதுச்சேரி: புதுவையில் இருந்து பெங்களூருக்கு இன்னும் 2 மாதத்தில் விமான சேவை தொடங்கப்படும் என மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறினார். இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் தென்மண்டல கவுன்சில் கூட்டம் புதுவையில் நேற்று நடந்தது. கூட்ட மைப்பின் தென்மண்டல சேர்மன் கோபாலகிருஷ்ணன், துணைத்தலைவர் அசோக் ஆகியோர் தலைமை தாங்கினர்.
நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது: புதுச்சேரியில் விவசாயம், தொழில்களை மேம்படுத்த தேவையான நடவ டிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. இந்தியாவில் நவீன தொழில்நுட்பங்களை கொண்டு வருவதில் பிரதமர் ஆர்வமாக உள்ளார். ஹார் டுவேர், சார்ப்ட்வேர் துறையில் நன்கு வளர்ச்சி கண்டு வருகிறோம். அமைதியான புதுவையில் புதிய தொழிற்சாலைகள் உருவாக தேவையான மின்உற்பத்தி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் எளிதாக கிடைக்கிறது. தொழில் நுட்பத்திலும் புதுவை வளர்ச்சி கண்டுள்ளது. இன்னும் 2 மாதங் களில் புதுவையில் இருந்து பெங்களூருக்கு விமான சேவை தொடகும் என்றார். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுவை ஆகிய 5 மாநிலங்களிலிருந்து 60 உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
Source: Dinakaran
No comments:
Post a Comment