Islamic Widget

July 22, 2010

விமானத்தின் கருப்புப் பெட்டியை கண்டுபிடித்தவர் காலமானார்

சிட்னி, ஜூலை 21: விமானத்தில் பயன்படுத்தப்படும் கருப்புப் பெட்டியைக் கண்டுபிடித்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் வாரன் (85) காலமானார்.
1934-ல் நடந்த விமான விபத்து ஒன்றில் வாரனின் தந்தை உயிரிழந்தார். இதை அடுத்து விமான விபத்துகளுக்கான காரணத்தை அறிந்துகொள்ளுவதன் அவசியத்தை உணர்ந்த வாரன், அதற்கான கருவியை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார்.
அவர் கண்டுபிடித்த கருப்புப் பெட்டி 1953-ம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வந்தது. விமானிகளுக்கும், தரைக்கட்டுபாட்டு மையத்துக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள், விமானம் இயங்கும் முறை உள்ளிட்டத் தகவல்களை கருப்புப் பெட்டி பதிவு செய்யும். விமானம் எந்த விதமான விபத்தில் சிக்கினாலும், கருப்புப் பெட்டிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கும். இதன்மூலம் விமானம் விபத்துக்குள்ளான காரணத்தை தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.

No comments:

Post a Comment