Islamic Widget

February 25, 2016

மோடி மீது மாயாவதி குற்றச்சாட்டு!

புதுடெல்லி (25-02-16): மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை விவகாரத்தில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இரு அவைகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ரோகித் வெமுலா தற்கொலை விவாதத்தை மாநிலங்களவையில் தொடங்கி வைத்து பேசிய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி விசாரணை செய்ய அமைக்கப்பட்டுள்ள குழுவில் தலித் யாரும் இல்லாதது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார். ரோகித் வெமுலா தற்கொலைக்கு காரணமான மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் மோடி அரசு எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.
பின்னர் இந்த வழக்கில் ஸ்மிருதி இரானி, பண்டாரு தத்தாத்ரேயா ஆகிய இரு மத்திய மந்திரிகள் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், பல்வேறு குற்றசாட்டுகளையும் அந்த அவையில் தெரிவித்தார். இதனையடுத்து மாநிலங்களவை தொடங்கிய ஒரு மணிநேரத்திலேயே ஸ்மிருதி இரானி மற்றும் மாயாவதி இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து பேசிய மாயாவதி, ரோகித் தற்கொலை விவகாரத்தையும், ஜே.என்.யு., மாணவர் பிரச்சனையும் தனித்தனியே விவாதிக்காவிட்டால் அவை நடவடிக்கையை எதிர்ப்போம் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment