Islamic Widget

August 06, 2012

வெள்ளாற்றில் கடல்நீர் உட்புகுவதை தடுக்கக் கோரிக்கை

சேத்தியாத்தோப்பு வரை வெள்ளாற்றில் கடல்நீர் உட்புகுந்து பாசனநீர் மற்றும் குடிநீர் உப்புநீராக மாறிவிட்டது. இதைத் தடுக்க வெள்ளாற்றில் தடுப்பணை கட்டுவதற்கும், வெள்ளாற்றில் சட்டவிரோதமாக மணல் எடுப்பதையும் அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என புவனகிரி ஊழல் எதிர்ப்பு இயக்க நிர்வாகிகள் தமிழக சட்டப்பேரவை மனுக்கள் குழுத் தலைவருக்கு மனு அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் எஸ்.கிருஷ்ணன், சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் அ.குணசேகரன் ஆகியோர் கூட்டாக அனுப்பியுள்ள மனு: சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி பகுதி மக்கள் வெள்ளாற்று தண்ணீரை நம்பிதான் விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் வெள்ளாற்று நீரைதான் குடிநீராகப் பயன்படுத்துகின்றனர். தற்போது சேத்தியாத்தோப்பு வரை வெள்ளாற்றில் கடல்நீர் உட்புகுந்து விட்டதால் பாசன நீர் மற்றும் குடிநீர் உப்புநீராக மாறிவிட்டது. இதனால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் அவதியுற்றுள்ளனர். தற்போது குடிப்பதற்கு கிராமங்களிலும் மினரல் வாட்டர் வாங்கி குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே புவனகிரி வெள்ளாற்றின் இடையே 4 அல்லது 5 இடங்களில் தடுப்பணைகள் கட்டி நீரை தேக்கி வைத்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும், உப்புநீர் கலப்பதும் தடுக்கப்படும் என மனுவில் ஊழல் எதிர்ப்பு இயக்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment