Islamic Widget

July 31, 2012

சவூதி அரேபியாவில் பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு தடை.



சவூதியில் புகையிலைக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் பொது இடங்களில் இனி சிகரெட் பிடிக்கவும் தடைவிதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில், 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு புகையினை பொருட்களை விற்க கூடாது, அரசு அலுவலகங்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சிகரெட் பிடிக்க கூடாது என சவூதி அரசு உத்தரவிட்டுள்ளது.
உலகிலேயே ‌புகையிலை பொருட்களை அதிகளவு இறக்குமதி செய்யும் நாடுகளில் சவூதி நான்காவது இடத்தில் உள்ளது. நாள் ஒன்றுக்கு 8 மில்லியன் டாலர் புகையிலைக்கு சவூதி செலவிடுவதாக புள்ளிவிவரம் கூறுகிறது.

இந்நிலையில் சவூதி இளவரசர் அகமது பின் அப்துலஜீஸ் கூறுகையில்,

சவூதி மக்களின் சுகாதார நலன் காக்க, புகையிலை பொருட்களுக்கு தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ‌கடந்த ஆண்டு தான் முதன்முறையாக விமான நிலையங்களில் புகைபிடிக்க தடைவிதிக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இது குறித்த விழிப்புணர்வு பிரசாரமும் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment