Islamic Widget

July 30, 2012

கடலூர் மாவட்டத்தில் 252 பள்ளி-கல்லூரி வாகனங்கள் சோதனை: 4 பஸ்கள் பறிமுதல்

கடலூர் மாவட்டத்தில் 252 பள்ளி-கல்லூரி வாகனங்கள் சோதனை: 4 பஸ்கள் பறிமுதல்சென்னை தாம்பரம் அருகே பள்ளிக்கூட பஸ்சில் ஒட்டையில் தவறி விழுந்து மாணவி சுருதி பலியானார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாவட்ட போக்குவரத்து அலுவலர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், விருத்தாசலம், கடலூர், நெய்வேலி உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் மாவட்ட போக்குவரத்து துறை அலுவலர் ஜெய்சங்கர் தலைமையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி ஆய்வு செய்யப்பட்டது. நேற்று 252 பள்ளி, கல்லூரி பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்கள் சோதனையிடப்பட்டது.

4 பள்ளி பஸ்கள் உரிய ஆவணமில்லாமல் இயக்கப்பட்டது கண்டறியப்பட்டது. விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 4 பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடலூர் முதுநகர் பகுதியில் ஏற்கனவே உதவியாளர், பள்ளி பஸ்கள் முறையான ஆவணம் மற்றும் தகுதி சான்று பெறாமல் இயக்கியது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. விதிமுறை மீறி இயக்கப்பட்ட அந்த வாகனங்கள் தொடர்புடைய பள்ளி நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்வது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெண்ணாடம், திட்டக்குடி, தொழுதூர், வேப்பூர் ஆகிய பகுதிகளில் தலா 2 தனியார் பஸ்களை பழுது நீக்கம் செய்து மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் காண்பிக்க வேண்டும். அதுவரை வாகனங்களை ஓட்டக்கூடாது என்று சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அளித்தனர். தகுதியில்லாத 7 பள்ளிக்கூட வாகன டிரைவர்களின் ஓட்டுனர் உரிமங்களை பறிமுதல் செய்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

சிதம்பரம் மற்றும் புவனகிரி பகுதிகளில் உள்ள 8 பள்ளிகளுக்கு சிதம்பரம் மோட்டார் வாகன ஆய்வாளர் ரவிச்சந்திரன், ஊழியர்களுடன் சென்று ஆய்வு செய்தார். சோதனையின்போது ஒரு தனியார் பள்ளி வாகனத்தில் கியர் பாக்ஸ் அருகே ஓட்டை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதை மூடும்படி அதிகாரிகள் கூறினார்கள். தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.

No comments:

Post a Comment