Islamic Widget

April 26, 2012

பரங்கிப்பேட்டையில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பரங்கிப்பேட்டையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


காலி பணியிடங்களை நிரப்புதல், ஊதியக்குழு முரண்பாடுகளை களைதல், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட துணைத் தலைவர் கலியமூர்த்தி தலைமையிலும், பரங்கிப்பேட்டையில் சதீஷ்குமார் தலைமையிலும் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொழிற்சங்க கூட்டமைப்புத் தலைவர் டி.மகாலிங்கம், ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சி.வெங்கடேசன், ஓய்வுபெற்றோர் அரசு ஊழியர் சங்கம் ஜி.பழனி, பொது சுகாதாரத்துறை சங்கம் கே.என்.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். வட்டச் செயலாளர் ஆர்.தமிழ்செல்வன் முன்னிலை வகித்தார். சாலைப் பணியாளர் சங்க நிர்வாகி பி.முத்து நன்றி கூறினார்.

No comments:

Post a Comment