பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பைத்துல்மால் கமிட்டி (பொதுநிதி கருவூலம்) சார்பாக ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் வழங்கப்படும் ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம் வசூல் மற்றும் வினியோகம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கடந்த வெள்ளி அன்று ஜூம்ஆ தொழுகைக்குப் பிறகு மீராப்பள்ளியில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் டாக்டர் நுரர் முஹம்மது தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கடந்த ஆண்டு ஃபித்ராவைப் போன்றே இந்தாண்டும் நபர் ஒன்றுக்கு ஃபித்ரா தொகை ரூ 50 நிர்ணயிக்கப்பட்டு வசூல் செய்வதற்கான ரசீது புத்தகம் பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஃபித்ரா வினியோகத்தின்போது ஃபித்ரா பெறுகின்ற நபர்களை புகைப்படம் எடுக்கக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நன்றி:mypno


This comment has been removed by a blog administrator.
ReplyDeleteயா அல்லாஹ்! கெட்ட நோய்கள், கெட்ட ஆசைகள், கெட்ட செயல்கள் இன்னும் வெறுக்கத்தக்க குணங்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். இன்னும் விரோதிகளின் கேலி கிண்டல்களிலிருந்தும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். என தூஆ செய்வேம்.. by ismail pno.news
DeleteAnonymous அவர்கள் எழுதிய கருத்தில் ஆபச.. வார்த்தைகள் இருந்ததால் அவர் கருத்து நீக்கபட்டது.
ReplyDelete