Islamic Widget

February 17, 2012

குழந்தைகளுக்கு தடுப்பூசி அட்டவணை

குழந்தைகளுக்கு, தடுப்பூசி, சொட்டு மருந்து போடும் பணியை அரசு தொடர்ச்சியாக செய்து வருகின்றது. சொட்டு மருந்து, தடுப்பூசி குறித்து ஆய்வாளர்கள் மத்தியில் சர்ச்சையான கருத்துக்கள் நிலவினாலும் அரசுப் பணியில் யாரும் தலையிடுவதில்லை.
தடுப்பூசி – சொட்டு மருந்து தேவையா இல்லையா என்ற விவாதத்திற்குள் நாம் இப்போது செல்லவில்லை. (பிரிதொரு சமயம் இது குறித்து அலசுவோம்) இப்போது அரசு வகுத்துள்ள கணக்குப்படி குழந்தைகளுக்குத் தேவையான தடுப்பூசிகளைப் பார்க்கலாம்.

பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி தொடர்ந்து போடப்பட்டு வருகின்றது. மக்கள் நலன் கருதி மருத்துவமனை செவிலியர்கள் மாதந்தோரும் நான்கு இடங்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசி, சொட்டு மருந்து போட்டு வருகிறார்கள். கும்மத்துப்பள்ளியில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் புதன் கிழமை தடுப்பூசிப் போடப்படுகின்றது (நேற்றையப்படம்) இதை இந்தப் பகுதி மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


குழந்தை நலனுக்கு இவை அவசியம் என்று அரசு கருதினாலும், போடப்படும் மருந்துகள், பயன்படுத்தப்படும் பொருட்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மக்கள் கருதுகிறார்கள்.
தடுப்பூசி வகைகள்.
* பிசிஜி – பிறப்பின் போது
* ஒபிவி (1) + ஹெபடைடிஸ் பி (1) – பிறப்பின்போது
* ஹெபடைடிஸ் பி (2) – 4 வாரங்கள்
* டிபிடி (1) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) – 8 வாரங்கள்
* டிபிடி (2) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) – 12 – 20 வாரங்கள்
* டிபிடி (3) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) – 18-20 வாரங்கள்
* அம்மை + ஒபிவி + ஹெபடைடிஸ் (3) – 8-9 மாதங்கள்
* சின்னம்மை (விருப்பத்துடன்) – 12-18 மாதங்கள்
* எம்எம்ஆர் – 15-18 மாதங்கள்
* எச்ஐபி (பூஸ்டர்) – 15-18 மாதங்கள்
* டிபிடி + ஒபிவி (முதல் பூஸ்டர்) – 18-24 மாதங்கள்
* ஹெபடைடிஸ்-ஏ மருந்து (விருப்பம்) – 2 ஆண்டுகள்
* டைபாய்டு ஊசி – 3 ஆண்டுகள்
* டிபிடி + ஒபிவி (இரண்டாவது பூஸ்டர்) – 5 ஆண்டுகள்
* ஹெபடைடிஸ் – ஏ மருந்து (விருப்பம் – 5 ஆண்டுகள்
* எம்எம்ஆர் (அம்மை மற்றும் எம்எம்ஆர் கொடுக்காவிட்டால்) – 5 ஆண்டுகள்
* வாய்வழியாக டைபாய்டு – 8 ஆண்டுகள்
* வாய்வழியாக டைபாய்டு – 9 ஆண்டுகள்
* டெட்டானஸ் – 10 ஆண்டுகள்
* சின்னம்மை தடுப்பூசி – 10 ஆண்டுகள் (சின்னம்மை தடுப்பூசி ஆரம்பத்திலேயே கொடுக்காவிட்டாலும், சின்னம்மை ஏற்கெனவே வராவிட்டாலும்)
* டைபாய்டு வாய்வழியாக – 12 ஆண்டுகள்
* டெட்டானஸ் டாக்சாய்டு (டிடி) – 16 ஆண்டுகள்
தடுப்பூசி போடப் போகும் போது பகிர வேண்டிய அவசியத் தகவல்:
உ‌ங்க‌ள் குழ‌ந்தை‌க்கு த‌ற்போது ஏதேனு‌ம் ஒரு ‌வித‌‌த்‌தி‌ல் உட‌ல் நல‌க் குறைவு இரு‌ந்தா‌ல், அதாவது கா‌ய்‌ச்ச‌ல், ச‌ளி, பே‌தி போ‌ன்ற ஏதேனு‌ம் ஒரு பா‌தி‌ப்பு இரு‌ந்தா‌ல் அதனை ‌நி‌ச்சயமாக‌க் கூற வே‌ண்டு‌ம்.
அதே‌ப்போல, எ‌ப்போதாவது இழ‌ப்புகளு‌ம், கா‌க்கா வ‌லி‌ப்பு‌ம் வ‌ந்‌திரு‌ந்தா‌ல் அதனை மற‌க்காம‌ல் தெ‌ரி‌வி‌க்க வே‌ண்டு‌ம்.
கடை‌சியாக தடு‌ப்பூ‌சி போ‌ட்டபோது எ‌தி‌ர்‌விளைவு ஏ‌தேனு‌ம் ஏ‌ற்ப‌ட்டிரு‌ந்தா‌ல் அதனை ‌‌நினைவு‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம்.
கட‌ந்த கால‌த்‌தி‌ல் ஒ‌வ்வாமை ஏதேனு‌ம் ஏ‌ற்ப‌ட்டிரு‌ந்தா‌ல் அது எ‌ந்த மா‌தி‌ரியான ஒ‌வ்வாமை எ‌ந்த மரு‌ந்தை எடு‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் போது ஏ‌ற்ப‌ட்டது எ‌ன்பதை கூற வே‌ண்டு‌ம்.
குழ‌ந்தை‌க்கு நா‌‌ள்ப‌ட்ட அ‌ல்லது கடுமையான நோ‌ய் ஏதேனு‌ம் வ‌ந்‌திரு‌ந்தா‌ல் அத‌ற்கான மரு‌ந்து எடு‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்தா‌ல் அதையு‌ம் கு‌றி‌ப்‌பி‌ட்டாக வே‌ண்டு‌ம்.
குழந்தைகள் ஆரோக்யமாக வளரவும் வாழவும் வாழ்த்துகிறோம்.

நன்றி:pnotimes

No comments:

Post a Comment