இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் கூடியுள்ள மாநாடு பங்களாதேசத் தலைநகர் டாக்காவின் புறநகர்ப்பகுதியில் நடைபெற்று வருகிறது.
பங்களாதேசத்தின் தலைநகர் டாக்கா அருகேயுள்ள துராக் நதிக்கரையில் இன்றிலிருந்து மூன்று நாள்களுக்கு நடைபெறும் இந்த மாநாடு உலகின் மிகப்பெரிய மாநாடுகளில் ஒன்று என்று சொல்லப்படுகிறது.
இன்று வெள்ளியன்று மட்டுமே சுமார் ஐந்து இலட்சம் முஸ்லிம்கள் வெள்ளி நண்பகல் தொழுகையில் கலந்துகொண்டனர் என்று அப்பகுதியின் காவல்துறை தலைவர் அப்துல் பாத்தின் தெரிவித்தார். மாநாட்டின் இறுதி நாளான ஞாயிறன்று 40 இலட்சம் மக்கள்வரை திரள்வார்கள் என்று அமைப்பாளர்களில் ஒருவர் தெரிவித்தார்.
அரசியல் தொடர்பற்ற தப்லீக் ஜமாஅத் என்னும் அமைப்பு நடத்தும் இந்த மாநாடு 1966 லிருந்து வருடந்தோறும் நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருக்கிற மத அறிஞர்கள் உரை நிகழ்த்துகிறார்கள்.

No comments:
Post a Comment