புதுடெல்லி:இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம்(சிமி) மீதான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய சட்ட அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. தடையை நீட்டிக்க சட்டரீதியான தடைகள் எதுவுமில்லை என இதுத்தொடர்பான உள்துறை அமைச்சகத்தின் சிபாரிசுக்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
வருகிறது பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி தடைக்கான கால அவகாசம் முடிவடைகிறது. தடையை நீட்டிப்பதற்கான தீர்மானம் வழக்கம்போல டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பாயத்தின் முடிவுக்கு விடப்படும்.
2001 செப்டம்பர் மாதத்தில் முதன்முதலாக சிமி தடைச் செய்யப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. 2008-ஆம் ஆண்டு கீதா மிட்டல் தலைமையிலான தீர்ப்பாயம் தடையை நீட்டிப்பதற்கான உத்தரவை ரத்துச் செய்தது. ஆனால் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவிற்கு தடை விதித்தது.
No comments:
Post a Comment