சென்னை: வானம் தெளிவாகவும், குளிர் அலை வீசுவதாலும் அடுத்த இரண்டு இரவுகளுக்கு தமிழகத்தில் கடும் பனிப்பொழிவும், கடும் குளிரும் வாட்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வழக்கத்திற்கு விரோதமாக கடும் பனிப் பொழிவும், குளிரும் நிலவுகிறது. இதனால் மக்கள் மாலைக்கு மேல் கூடுகளைத் தேடி ஓடும் பறவைகளைப் போலவே வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். வெளியில் தலை காட்டினால் கடும் பனியில் சிக்கி பலவித வியாதிகளுக்கு உள்ளாக நேரிடுகிறது.
இரவில் கடும் பனியுடன், கடும் குளிரும் அடிப்பதால் மக்கள் குறிப்பாக குழந்தைகள் மற்றும் வயோதிகர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
ஏன் இந்த அதீத பனிப்பொழிவு என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் விளக்குகையில்,
குளிர் அலை தற்போது வீசி வருகிறது. வானமும் தெளிவாக உள்ளது. இதுவே அதிக அளவிலான பனிப்பொழிவுக்கும், கடும் குளிருக்கும் காரணம். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தற்போது நல்ல பனிப்பொழிவும் குளிரும் காணப்படுகிறது.
குறிப்பாக வட தமிழக பகுதிகளில் நல்ல பனிப்பொழிவு காணப்படுகிறது. இங்கு அதிக அளவில் குளிர் அலை வீசுவதே இதற்குக் காரணம்.
தெற்கு தமிழகத்தில் சில இடங்களில் குறைந்த வெப்ப நிலை வெகுவாக குறைந்துள்ளது. வட தமிழகத்தில் இது சற்று அதிகரித்துள்ளது.
21ம் தேதி காலை வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்.
வடக்கு உள்புறத் தமிழகத்தில் அடுத்த 2 ராத்திரிகளுக்கு குளிர் அலை வீசும்.
நீலகிரி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் சில இடங்களில் அடுத்த 2 ராத்திரிகளுக்கு பனிமூட்டம் அதிகமாக இருக்கும்.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு குறைந்தபட்ச வெப்ப நிலை 18 டிகிரியாக இருக்கும்.

you are giving good information for our pno people and others. All the best for your service.
ReplyDelete