Islamic Widget

December 29, 2011

புயல் எதிரொலியாக அனைத்து கலெக்டர்களும் தயார் நிலையில் இருக்க, அரசு உத்தரவு


சென்னை, டிச. 29-  'தானே' புயல் 30-ந் தேதி கரையை கடக்க இருப்பதால் புயல் மழை பெய்தால் மக்கள் பாதுகாப்பாக இ ருக்க முன் எச்சரிக்கையாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க தயாராக இருக்க அனைத்து கலெக்டர்களுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.வங்கக்கடலில் உருவான 'தானே' புயல் 30-ந் தேதி கடலூருக்கும், நெல்லூருக்கும் இடையே கரை யை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால்
இந்தபுயல் வலுவாக இருக்குமோ அல்லது வலு இழந்துதான் கரையை கடக்குமோ என்பது இன்னும் உறுதியாக சொல்லமுடியாமல் இருக்கிறது.
இருப்பினும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் புயல் பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர்களுக்கு தமிழக அரசு சார்பில் வருவாய் நிர்வாக ஆணையர் ஞானதேசிகன் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து ஞானதேசிகன் கூறியதாவது:-
'தானே' புயல் 30-ந் தேதி கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே அனைத்து மாவட்ட கலெக்டர்களுடனும் பேசி உள்ளேன். மாவட்டம் முழுவதும் உள்ள வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை ஆகிய துறைகள் தயாராக இருக்கும்படி கூறியிருக்கிறேன்.
புயல் வந்தாலும், வராவிட்டாலும் நேற்று முதல் உஷார் ஆக இருக்கும்படி உத்தரவிட்டுள்ளேன்.
மழை, வெள்ளம் வந்தால் மக்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கையும் போர்க்கால அடிப்படையிலும், முன் எச்சரிக்கையாகவும் எடுக்கும்படியும், இப்போதே தயார் நிலையில் இருக்கும்படியும் உத்தரவிட்டுள்ளேன்.
மீன்வள துறைக்கும் இதுகுறித்து சொல்லியிருக்கிறோம். எனவே தமிழ்நாடு முழுவதும் கடற்கரை மாவட்டம் மட்டுமல்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் புயல் வந்தால் அதை எதிர்கொள்ள தயார் ஆக இருக்கிறார்கள். இவ்வாறு ஞானதேசிகன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment