July 22, 2010
பொதுமக்களை அச்சுறுத்திய விஷவண்டுகள் அழிப்பு
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே பொதுமக் களை அச்சுறுத்தி வந்த விஷ வண்டுகளை தீயணைப்பு படையினர் அழித்தனர்.பரங்கிப்பேட்டை அடுத்த பால்வாதுண்ணான் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் வீட்டு பக்கத்தில் உள்ள வேப்ப மரத்தில் விஷ வண்டுகள் கூடுகட்டி இருந்தது. அதிலிருந்து வெளியேறிய வண்டுகள் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களை விரட்டி வந்தது. இதனால் அந்த பக்கம் செல்லவே மக்கள் பயந்து வந்தனர். இதுகுறித்து பரங்கிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.நேற்று தீயணைப்பு நிலைய அலுவலர் அஞ்சுவராஜன் தலைமையில் தீயணைப்பு படையினர் ராமலிங்கம், செல்வம், ஜெய்சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விஷ வண்டுகளை தீவைத்து அழித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
- புதிய டாஸ்மாக் கிளையை திறப்பதற்கு முன்பே உடனே இழுத்துமூட கோரிக்கை
- தனியே பிரிந்தது ரயில் இன்ஜின்; பெரிய விபத்து தவிர்ப்பு
- சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தேர்தல்களம்
- வெப் கேமரா புகைப்படம், கைரேகைகள் மூலம் பத்திரப் பதிவு
- வடிவேலு அடி வாங்குற நேரம் நெருங்கிடுச்சி : விந்தியா
- காஸ் சிலிண்டர்கள் எடை குறைவு:நிறுவனங்கள் மீது நடவடிக்கை
- விமானத்தின் கருப்புப் பெட்டியை கண்டுபிடித்தவர் காலமானார்
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
- ரயிலில் அடிப்பட்டு இருவர் சாவு
- (no title)
No comments:
Post a Comment