கடலூர் லாரன்ஸ் சாலை ரயில்வே கேட் வழியாக வியாழக்கிழமை முதல், அனைத்து வாகனப் போக்குவரத்தும் நிறுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி அறிவித்து உள்ளார்.
ஆட்சியர் புதன்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையம் அருகில் லாரன்ஸ் சாலையில் அமைந்துள்ள ரயில்வே லெவல் கிராசிங்கில் ரயில்வே சுரங்கப்பாதை அமைய இருக்கிறது. இத்திட்டத்தை நிறைவேற்றும் வகையில் திருப்பாப்புலியூர் ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடிவிட ரயில்வே நிர்வாகம் உத்தேசித்து உள்ளது. சுரங்கப் பாதைக்கான அடிப்படை பணிகள், தாங்கும் சுவர்கள் மற்றும் சாலை அஸ்திவாரப் பணிகளை மேற்கொள்ள, லாரன்ஸ் சாலை முழுவதையும் தோண்டும் பணி டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது. எனவே வியாழக்கிழமை (டிசம்பர் 1) முதல் லாரன்ஸ் சாலை வழியாக இயங்கி வரும் புறநகர், நகர பஸ்கள், கனரக வாகனங்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் அனைத்தும் கடலூர்-திருக்கோயிலூர் அணைக்கட்டு சாலையில் அமைந்துள்ள ரயில்வே மேம்பாலம் வழியாக திருப்பி விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment