Islamic Widget

December 13, 2011

வேண்டும் கோழி வதை தடுப்புச் சட்டம்!

நேற்று முன்தினம் சென்னை மெமோரியல் ஹால் அருகே 20-30 பேர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். காவிக்கொடிகளுடன் கூட்டத்தில் நின்றவர்கள் கோஷம் போட்டுக்கொண்டிருந்ததால் ஐயப்ப பக்தர்களோ என்ற சந்தேகத்துடன் அருகில் சென்று பார்த்தால் கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக திறக்கக்கோரி மத்திய அரசை வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள்.

யார் அவர்கள்? என்று விசாரித்தபோது இந்து மஹா சபாவினராம். பரவாயில்லையே இவர்களும் வீதிக்குவந்து போராடுகிறார்களே என்று கொஞ்சம் ஆச்சரியப்பட்டபோதுதான், கோஷங்களுக்கிடையே மற்றொரு கோஷமும் காதில் விழுந்து தொலைத்தது. "பசுவதை தடுப்புச் சட்டம்" வேண்டுமாம்!

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடிவிட்டு அங்கு கசாப்புகடை எதுவும் வைத்துவிட்டார்களா? என்று குழம்பி விட்டேன். கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் திறக்க கோரிக்கை வைத்ததைக்கூட ஒருவகையில் சேர்த்துக் கொள்ளலாம். பசுவதை தடுப்புச் சட்டத்திற்கு என்ன அவசியம் வந்தது?

117 கோடி இந்தியர்களில் அசைவப் பிரியர்கள் 60-80 கோடிபேர் இருக்கக்கூடும். சபரிமலைக்கு மாலைபோட்ட ஐயப்ப பக்தர்கள்கூட கோழிக்கறி சாப்பிடுவார்கள் என்று இன்னொரு செய்தியில் வெளியாகியிருந்தது. அதாவது, சபரிமலைக்கு மாலை போட்டதால் அவர்கள் கோழிக்கறி சாப்பிடுவதில்லையாம். இதனால் கோழிக்கறி விலை வீழ்ச்சியடைந்ததாக செய்தி வெளியிட்டிருந்தார்கள்.

பசுவதை தடைசட்டம் கோரும் 'மஹா' இந்துக்கள் கோழிவதை தடைசட்டமும் கோரலாமே. ஏனெனில் சேவலும் முருகக் கடவுளின் வாகனம்தான்! பசுவுக்கு ஒரு நீதி! சேவலுக்கு ஒரு நீதியா? அதேபோல், மரங்களை தெய்வமாக வணங்குபவர்களும் நம்நாட்டில் உள்ளதால் மரங்களையும் வெட்டக்கூடாது என்று மரவதை தடுப்புச் சட்டமும் கோரலாம்.

மேலும், டாஸ்மாக்கில் சோமபானம், சுராபானம் குடித்துவிட்டு வீட்டிலுள்ளவர்களைக் குடிமகன்கள் வதைப்பதால் மனிதவதை தடுப்புச்சட்டத்தையும் அமல்படுத்த கோரிக்கை வைத்தால் அம்மாவின் அரசு நிறைவேற்றாமலா போகும்?
எப்படியோ போங்க! கடைசியில் "பாம்பு வதை தடைச்சட்டம்" கோராமல் இருந்தால் சரிதான்!

 நன்றி:அறிவழகன்.

No comments:

Post a Comment