ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் (Health Awareness Program) நிகழ்ச்சி சென்ற வியாழன் இரவு 8 மணி அளவில் (15.12.2011) இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் சங்க உறுப்பினர் திரு லியாகத் அவர்கள் வரவேற்ப்புரை வழங்க திரு ராபியா அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.முதலில் குழந்தைகள் நல மருத்துவர் திரு வெற்றிவேல் அவர்கள் மனிதர்களின் சுத்தமும் சுற்றுப்புற சுகாதாரமும் மனிதனின் சுகமான வாழ்வுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை கணினி மூலம் மிக அருமையான செந்தமிழில் பல பல உதாரணங்களுடன் உரையாற்றினார். மேலும் குழந்தைகளை எத்தகைய முன்னெச்சரிக்கைகளோடு வளர்க்கவேண்டும் என்பதையும் மிக அருமையாக எடுத்துரைத்தார்.
அடுத்து உரையாற்றிய நரம்பியல் நிபுணர் மருத்துவர் திரு வேல்முருகன் அவர்கள் கடவுள் தந்த தலைக்கணினி என்ற தலைப்பில் மிக அருமையான கணினி உதாரணங்களோடு மூளையின் செயல்பாடுகள் பற்றி விளக்கினார். மூளையை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதையும், மூளை கடவுளால் மனிதனுக்கு கொடுக்கப்பட்டுள்ள வரபிரசாதம் என்பதையும் தெளிவாக பல உதாரணங்களோடு விளக்கினார்.பின்பு சிறப்பு பேச்சாளர்களான மருத்துவர்கள் திரு வெற்றிவேல் மற்றும் திரு வேல்முருகன் அவர்களுக்கு ஜெட்டா தமிழ் சங்கத்தின் நினைவுக் கேடயம் அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
திரு மோகன் அவர்களின் நன்றி நவிலலுக்குப்பின் இரவு உணவுடன் கூட்டம் இனிதே நிறைவேறியது.
engay irunthu intha mattera SUTTINGA,
ReplyDelete