Islamic Widget

December 17, 2011

மோடியை விசாரணைச் செய்யக்கோரும் மனு: விசாரணை 26-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு


அஹ்மதாபாத்:2002-ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப் படுகொலை தொடர்பாக அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியை விசாரணைச் செய்ய நானாவதி கமிஷனுக்கு உத்தரவிடக்கோரும் மனு மீதான விசாரணையை குஜராத் உயர்நீதிமன்றம் இம்மாதம் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஜே. முகோபாத்யாயா, நீதிபதி அகில்
குரைஷி ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி இவ்வழக்கில் தீர்ப்பு கூற தீர்மானித்திருந்தது.
இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக ஜனசங்கர்ஷ மஞ்ச் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் இம்மனுவை தாக்கல்
செய்தது. ஆனால் நீதிபதி முகோபாத்யாயாவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனால் இவ்வழக்கு புதிய பெஞ்சின் கீழ் வந்தது. நீதிபதி குரைஷி, சோணியா கோகனி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தற்பொழுது இவ்வழக்கை பரிசீலிக்கிறது.
நானாவதி கமிஷனின் காலவரம்பு இதுவரை 17 தடவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 31-ஆம் தேதி கமிஷனின் கால அவகாசம் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் கமிஷனின் கால அவகாசத்தை இனியும் நீட்ட எண்ணம் உள்ளதா? என்பதை குறித்து விசாரித்து 19-ஆம் தேதி நீதிமன்றத்தில் தெரியப்படுத்த நீதிபதி குரைஷி அரசு வழக்குரைஞருக்கு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment