அத்வானி ரத யாத்திரையின்போது, பாலத்தின் அடியில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இரு முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, தென்காசி நெடுஞ்சாலையில் ஆலம்பட்டி கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தின் அருகே சாலையில் ஒரு தரைப்பாலம் உள்ளது.
அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் அப்பாலத்தைக் கடந்தே செல்லவேண்டும்.இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தென் மாவட்டங்களில் பாஜக தலைவர் அத்வானி ஊழல் எதிர்ப்பு யாத்திரை சென்றார். அவர் மதுரையில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, ஆலம்பட்டி வழியாக ராஜபாளையம் செல்ல திட்டமிட்டிருந்தார்.
இதற்கிடையே அந்தப் பாலத்தின் வழியாக வயர் வருவதை அங்குக் காலைக்கடன் கழிக்கச் சென்ற ஒருவர் பார்த்து, உடனடியாக அது குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார். காவல்துறையினர் விரைந்து வந்து பரிசோதித்ததில், பாலத்தின் அடியில் 5 அடி நீள பைப் ஒன்று வெடிமருந்து நிரப்பி வைக்கப்பட்டு இருந்ததைக் கண்டுபிடித்தனர். உடனடியாக அதனைச் செயலிழக்கச் செய்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். வழக்கு சிறப்பு புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், சிறப்பு புலனாய்வு துறையினரிடமிருந்து இன்று ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
"பாஜக தலைவர் அத்வானியின் ரத யாத்திரை தமிழக வருகையின் போது, முன்னரே திட்டமிட்டிருந்த மதுரை-ராஜ பாளையம் சாலையில் அல்லம்பட்டி, திருமங்கலம் பாதையில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவை நீக்கம் செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கில் மதுரையிலுள்ள நெல்பேட்டையைச் சேர்ந்த சிக்கந்தர் பாஷா என்பவரின் மகன் அப்துர் ரஹ்மான் (எ) அப்துல்லாஹ், வயது 26 மற்றும் மதுரையிலுள்ள சிம்மக்கல் பகுதியைச் சேர்ந்த காஜா ஹுஸைன் என்பவரின் மகன் இஸ்மத், வயது 22 ஆகியோர் குண்டு வைத்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், குண்டு வைப்பதற்காக அவர்கள் உபயோகித்த ஒரு ஆட்டோ மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றைக் காவல்துறை கைப்பற்றியது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது"
என்று கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment